Designed by Iniyas LTD
ஜல்லிக்கட்டு குறித்து முடிவு எடுக்கப்படாமல் முடிவடைந்தது மத்திய அமைச்சரவைக் கூட்டம்
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு குறித்து முடிவு எடுக்கப்படாமல் முடிவடைந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படலாம் என்று, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவிக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும், பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.