தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அம்மாவுக்காய் சில வரிகள்………………..

அம்மா

அம்மா!

சும்மா எல்லோரும்

கண்னெதிரே

காணும் கடவுள்,

என் அம்மா!

மனித உருவில் நான்

கண்ட தெய்வம்,

என்னை சுமந்தபோது-அவள்

கருவறை நிறைந்திருந்தது

வறுமையால்-அவள்

வயிறுமட்டும் வெறுமை

ஒற்றை வயிற்றை

நிரப்ப முடியாதவள்

பெற்ற என் வயிற்றை நிரப்ப

போராடினாள்…….

பற்றைக்குள் செத்த

மரங்களின் குச்சிகளை- தன்

வலிமைக்கேற்ப  ஒடித்துக்கொண்டு

உச்சி வெய்லில்-அவள்

பாதணியில்லா பாதங்களை

பதித்து வந்து- என்

பசி போக்கினாள்….

சில நேரம்-அவள்

விற்காத விறகுகளை

விலையேதும் பேசாமல்

அரைப்படி அரிசிக்காய் போட்டுவிட்டு

அரைவயிறேனும் எனக்கு

நிரப்பிவிட்டாள். – அவள்

நிரந்தரமாய் தன் வயிற்ரை

காயவிட்டு…

அம்மாவின் கண்ணோரம்

நித்தம் கண்ணீர் கண்டேன்,

என்னம்மா என்று கேட்க

வியர்வை அது என்று

விரலால் ஒற்றிக்கொள்வாள்.

இன்றுவரை புரியவில்லை?…

வறுமையை நினைத்து அழுதாளோ?

பசியால் அழுதாளோ?

காலத்தின் சுழற்ச்சி- என்

வளர்ச்சி

சொத்துக்கள் சேர்ந்தது

சொந்தங்கள் ஒட்டிக்கொண்டது,

சோதனைகள் எம்மை

தொட்ட  போது

விட்ட சொந்தங்களை-நான்

தேடவில்லை.

பெற்றவர்கள் கைவிட்ட

பெற்றோரை நான் தேடுகிறேன்

என் அம்மாவின் முகத்தை

அவர்கள் அன்பினிலே

கண்டுகொண்டேன்.

அரைவயிற்றுக்காய்

போராடிய நான் இன்று

அம்மாவின் நினைவோடு

முதியவர் காப்பகம் நோக்கியே

என் பயணம்……….

ஆக்கம்:-

சி.கலைவிழி

Comments
Loading...