Designed by Iniyas LTD
பருத்தித்துறையில் பாம்பு கடித்து மாணவன் பலி!
இரவு வேளை பட்டம் விடச் சென்ற கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு இலக்காகி மரணமடைந்த சம்பவம் துன்னாலைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் துன்னாலை வடக்கைச் சேர்ந்த சிவலோகநாதன் தேசிகன் (வயது 18) என்பவரே பாம்புக்கடிக்கு இலக்காகி மரணம் அடைந்தவராவார்.
கடந்த 11ஆம் திகதி இரவு பட்டத்திற்கு மின்குமிழ் பூட்டி பட்டம் ஏற்றும் நடவடிக்கையில் குறித்த மாணவன் ஈடுபட்டிருந்துள்ளார்.
அந்த வேளையில் இவர் பாம்புக்கடிக்கு உள்ளாகிய நிலையில் உடனடியாக வட மராட்சி மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மேலதிக சி்கிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று பகல் மரணமடைந்துள்ளார்.
நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.