Designed by Iniyas LTD
அவுஸ்த்ரேலியாவில் இருந்து வந்த ஊடகவியலாளர் கைது!
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் மாலை குறித்த ஊடகவியலாளர் நாடு திரும்பிய போது ஸ்ரீலங்காவின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவரை கைதுச் செய்ததாகவும் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியமை தொfடர்பிலேயே அவரைக் கைதுச் செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஹிக்கடுவை பகுதியில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் புண்ணிய மூர்த்தி சசிகரன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இந் நிலையிலேயே அவர் நேற்று முன் தினம் தாயகம் திரும்பியுள்ளார். இதன் போது ஸ்ரீலங்கா விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாஅரிகள் புண்ணியமூர்த்தி சசிகரனை கைது செய்த நிலையில் அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். சட்ட விரோதமாக சட்ட ரீதியிலான துறை முகம் அல்லாத ஒரு இடத்திலிருந்து வெளி நாடொன்றுக்கு பயணித்தமை தொடர்பில் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சசிகரன் நேற்று மாலை நீர்கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.