Designed by Iniyas LTD
நீர்வேலியில் ஆணின் சடலம் மீட்பு!
சிறுப்பிட்டி மத்தி நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று வியாழக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த அப்பாக்குட்டி இராசதுரை (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் உள்ள வீடொன்றில், சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு அப்பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த அச்சுவேலி பொலிஸார், குறித்த பகுதியினைச் சுற்றி குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை, பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.