தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டி 20 க்காக இந்தியா சென்றுள்ள ஸ்ரீலங்கா அணி!

India-vs-Sri-Lanka-2016-Schedule-Time-Table-Fixtures-Venuesஇலங்கை கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகளைக் கொண்ட டி20 போட்டியில் விளையாட இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ளது. இதன் முதலாவது போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதியன்று புனேயில் ஆரம்பமாகவுள்ளதோடு, ஏனைய இரண்டு போட்டிகளும் 12 ஆம் திகதியன்று ராஞ்சியிலும், 14ஆம் திகதியன்று விசாகபட்டிணத்திலும் இரவு 7.30 மணிக்கு மின்னொளியில் நடைபெறும்.

இத் தொடரில், காயம் காரணமாக டி20 அணி தரைவரான லசித் மலிங்க, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணித்தலைவரான ஏஞ்சலோ மெத்தியூஸ பங்கேற்பவில்லை. ஆகையால் அணித்தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் வேகப்பந்து வீச்சாளரான தில்ஹார பெர்னாண்டோ,சகல துறை வீரரான சீக்குககே பிரசன்ன ஆகியோர் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

இதுவரை இரு அணிகளும் 6 தடவைகள் ஒன்றையொன்றை எதிர்த்தாடி தலா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. ஐ.சி.சி தரவரிசையில் இந்தியா முதலாவது இடத்திலும் இலங்கை 3ஆவது இடத்திலும் உள்ளது. எதிர்வரும் ஆசியக் கிண்ணத் தொடர் மற்றும் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடருக்கு முன்னோடியாக அமையும்.

இலங்கை கிரிக்கெட் அணி விபரம் ,தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), திலகரட்ண டில்ஷான், தனுஷ்க குணதிலக்க, தசுன் சானக்க, சாமர கப்புகெதர, அசேல குணரட்ன, மிலிந்த சிறிவர்தன, சீக்குகே பிரசன்ன, திசர பெரேரா, சச்சித்ர சேனாநாயக்க, தில்ஹார பெர்னாண்டோ, ஜெப்ரி வென்டர்சே, துஷ்மன்த சமீர, பினுர பெர்னாண்டோ, கசுன் ரஜித

இந்திய கிரிக்கெட் அணி விபரம், மஹேந்திர சிங் டோனி (அணித் தலைவர்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அஜின்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரிட் பூம்ராஹ், ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், மொஹமட் சமி, பவான் நேகி.

Comments
Loading...