தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இங்கிலாந்தில் ஹெலிகாப்டர் பயிற்சியின்போது விபத்து: 4 அமெரிக்க விமானிகள் பலி

SENPAKAMலண்டன் : இங்கிலாந்து நாட்டின் கிழக்கு பகுதியில் வழக்கமாக மேற்கொள்ளும் பயிற்சியின்போது அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.  இதில், அமெரிக்க விமானிகள் 4 பேர் பலியானார்கள்.  இத்தகவலை போலீசார் மற்றும் அமெரிக்க விமான படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு வட கிழக்கே 130 மைல்கள் தொலைவில் உள்ள கிராம பகுதியில் கடற்கரையோரம் அமெரிக்க விமான தளம் ஒன்று அமைந்துள்ளது.அங்கிருந்து போர் ஹெலிகாப்டர் வகையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று நள்ளிரவு 11.30 மணியளவில் கிளம்பி சென்றது.  அதில் 4 விமானிகள் இருந்தனர்.  அவர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.  மிக தாழ்வான நிலையிலேயே பறந்து சென்ற அவர்களது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில், 4 விமானிகளின் நிலை குறித்து விவரம் தெரியவில்லை என்று அமெரிக்க விமான படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 விபத்திற்கான காரணம் குறித்து எதுவும் தெரியாத நிலையில் அது குறித்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...