தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அவசர கதியில் பாலம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணி முழுவதும் நிறைவடையாமல், அவசர கதியில் பாலம் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட திக்குறுச்சி – வள்ளகடவு உயர் மட்ட பாலத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.  bridge

இதனை தொடர்ந்து மார்த்தாண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாஜன் சிங் சவான் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ், பணி முழுவதும் நிறைவடையாமல், அவசர கதியில் பாலம் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டினார்.   பாலத்தின் இருபுறங்களிலும் முறையாக சுவர் அமைக்கப்பட்ட பின்னரே, பாலத்தை, மக்களின் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்

Comments
Loading...