தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகாமக பெருவிழாவில் உச்சகட்ட பாதுகாப்பு

கும்பகோணம் மகாமக பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நாளை நடைபெறுவதை முன்னிட்டு அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  temp

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக பெருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது மகாமக பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில் இதுவரை 20 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில்தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக 2800 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 7 தற்காலிக பேருந்து நிலையம்  மற்றும்  போக்குவரத்து துறை சார்பாக 1500க்கு மேற்பட்ட ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் கும்பகோணம் நகரத்திற்கு உள்ளே செல்ல மினி பேருந்துக்கள் இயக்கபடுவது பக்கதர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Comments
Loading...