தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எகிப்தில் நான்கு வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை!

21-1456053359-judgement3434-600-jpgஎகிப்தில் 4 கொலை செய்ததாகக் கூறி 4 வயது சிறுவனுக்கு கெய்ரோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எகிப்தில் உள்ள கெய்ரோவில் இருக்கும் நீதிமன்றம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பு உலக மக்களை வியக்க வைத்துள்ளது. காரணம் அகமது மன்சூர் கர்னி என்ற 4 வயது சிறுவன் 4 கொலைகள் செய்ததாகக் கூறி நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை அளித்துள்ளது.

2014ம் ஆண்டு அதாவது அகமதுக்கு 2 வயது இருக்கையில் அவர் 4 கொலைகள் செய்து, அரசு சொத்துக்களை சேதம் செய்து மற்றும் சட்ட ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் 115 பேருடன் சேர்த்து அகமதுவின் பெயரும் சேர்க்கப்பட்டது. அகமதின் பிறப்பு சான்றிதழ் பாதுகாப்பு படையிடம் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த வழக்கு ராணுவ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் அகமதுவின் பெயர் சேர்க்கப்பட்டதில் தவறு ஏற்பட்டுவிட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

Comments
Loading...