தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகள் சாகும் வரை பட்டினிப்போராட்டம்!

kai_1விசா­ர­ணை­க­ளின்றி நீண்­ட­கா­ல­மாகத் தடுத்துவைக்­கப்­பட்­டுள்ள தம்மை விடு­தலை செய்­யக் ­கோரி அநு­ரா­த­பு­ரம் சிறைச் சாலையில் தடுத்துவைக்­கப்­பட்டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் சாகும் வரை­யி ­லான உண்­ணா­வி­ர­தப் ­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ள­தாக சிறைச்­சாலை தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன.

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் எந்­த­வித குற்­றச்­சாட்­டுக்­களும் சுமத்­தப்­ப­டாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திக­தி­யி­லி­ருந்து தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள யாழ்.கர­வெட்டி வடக்கு கர­ண­வாயைச் சேர்ந்த மதி­ய­ரசன் சுலக்சன், நாவ­லப்­பிட்டி மக்­கும்­ப­ரவைச் சேர்ந்த கணேசன் சந்­திரன் ஆகி­யேரே நேற்­றுக்­காலை முதல் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை மகஸின் சிறைச்­சா­லையின் ஜே பிரிவில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பிர­ம­ச­காயம் உத­ய­குமார், சிவ­சுப்­பி­ர­ம­ணியம் தில்­லராஜ், நடேஸ் குக­நாதன், மு.சிவ­நாதன், மா.நீதி­நாதன், க.வேத­நா­யகம், ந.தர்­ம­ராஜா, சு.ஞான­சீலன், தயா­பரன், செல்­லத்­துரை கிரு­பா­னந்தன், தி.மனோ­கரன், யோசப் செபஸ்­சியான், சுப்­பி­ர­ம­ணியன் கபிலன், இரா­ச­துரை திரு­வருள், இர­வீந்­திரன் மதனி ஆகியோர் இன்று செவ்­வாய்க்­கி­ழமை மகஸின் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை மேற்­கொள்­ள­வுள்­ளனர்.

தமது விடு­தலை குறித்து உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் வரையில் தாம் உண்­ணா­வி­ரப்­போ­ராட்­டத்தைக் கைவி­டப்­போ­வ­தில்­லை­யெ­னவும் நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணை­க­ளின்றி சிறைச்­சா­லை­களில் தங்­கி­யி­ருந்து சொல்­லெண்ணா துன்­பங்­களை அனு­ப­வித்து வரும் நாம் விடு­த­லையை வலி­யு­றுத்தி உயிரைத் துச்­ச­மென மதித்தே இவ்­வா­றான போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ள­தாக உற­வி­னர்கள் ஊடாக அறி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை தமது விடு­த­லையை வலி­யுத்­தியும் தாம் கைது செய்­யப்­பட்­ட­மைக்­கான காரணம் உள்­ளிட்ட அனைத்து விபரங்களையும் தமது போராட்டத்திற்கான காரணத்தையும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் உட்டப சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...