தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முழு வீச்சுடன் தேர்தல் களத்தில் திமுக

திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும், திமுக தேர்தல் வேலையில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் திமுக எம்.பி. கனிமொழி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  திருமண நிகழ்வில் பங்கேற்க கோவை வந்த கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.MP-Kanimozhi

அப்போது கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடிப்பது குறித்து கேட்ட கேள்விக்கு, திமுக தேர்தல் வேலையில் கவனம் செலுத்தி மும்மரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். திமுக பொருளாளர் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும், இது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

மேலும், வேட்பாளார்களுக்கான நேர்முக தேர்வுகள் முடிந்த பிறகு திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனவும் கனிமொழி தெரிவித்தார். தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படைகள் மூலம்  கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தினார்.

Comments
Loading...