Designed by Iniyas LTD
தமி.அர. கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கிளியில் ஆர்ப்பாட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி திரேசம்மா ஆலயத்திலிருந்து சித்தி விநாயகர் ஆலயம் வரை நடைபயணமாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
“உண்ணாநோன்பில் அரசியல் கைதிகள் கண்ணீரில் அவர்களின் குடும்பங்கள் மீது அரசே கருணை காட்டு” எனக் கோரி சேவைச் சந்தை வர்த்தகர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. ஒரு சில இனவாதிகளுக்காக ஒரு சமூகமே சீரழிக்கப்படலாமா, ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பாயா நல்லாட்சி அரசே, நம் பிள்ளைகள் விடுதலைக்காக நல்லாட்சிக்கு வாக்களித்த நாம் தினம் தினம் நடுத்தெருப் போராட்டத்தில், ஆகிய வாசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
