தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

30 எம் பி க்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை!

160317150547_mahinda_at_rally2_512x288_wimalweeravansa_nocreditஸ்ரீலங்கா  அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பொது எதிரணியினரால் ஹைட் பார்க் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை  இடம்பெற்ற கூட்டத்தில் ஜக்கிய மக்கள் முன்னணியின் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 30 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் பங்கேற்றினர். இந்த போராட்டம் காரணமாக கொழும்பில் பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மஹிந்தவின் ஆதரவாளர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்காதே, எட்கா உடன்படிக்கையை உடனடியாக நிறுத்து போன்ற கோசங்களை எழுப்பினர். பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதுடன், அதிகளவிலான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்த நிலையில்,  நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க,  முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச. ஐக்கிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, சந்திரசிறி கஜதீர, உதய கம்பம்பில, முன்னாள் அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, ஆகியோரும் பங்கேற்றனர்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, கெஹலிய ரம்புக்வெல, சி.பி. ரத்நாயக்க, லோஹான் ரத்வத்தை, குமார வெல்கம, காமினி லொக்குகே, சுதந்த புஞ்சி நிலமே, திலும் அமுனுகம, கீதா குமாரசிங்க, எஸ்.சந்திரசேன, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, டளஸ் அழகப்பெரும, மஹிந்த யாப்பா அபேவர்தன, மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Comments
Loading...