Designed by Iniyas LTD
எய்ட்ஸ் நோய்க்கு விரைவில் தடுப்பூசி! அமெரிக்காவில் சாதனை
எச்.ஐ.வியினால் பாதித்தோருக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அமெரிக்காவிலுள்ள, ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது..
எய்ட்ஸ் பாதிப்பு வந்த பின், அது மனித உடலில் உள்ள செல்களில் இருக்கும் புரதச் சத்தை, முடக்கத் தொடங்குகிறது. அதனால் மனிதனின் உடலில் இயற்கையிலேயே உள்ள எதிர்ப்பு சக்தி முடங்கி, நோய்க்கு பலியாகிறான். ஆனால், எய்ட்ஸ் பாதித்த சிலரது உடலில் மட்டும் இந்த புரதச் சத்து முடங்குவது இல்லை. எய்ட்சுக்கு எதிரான திறன் வாய்ந்த புரதங்களை, இயற்கையாகவே உற்பத்தி செய்யும் திறன், பலரது உடலில் உள்ளது. அப்படிப்பட்டவர்களின் ரத்தத்தை ஆராய்ந்து, அதன் பின்னணியில் செயல்படும் சக்தி வாய்ந்த செல்களை அடையாளம் கண்டுள்ளோம். அத்தகைய செல்களை, மனித ரத்தத்திலிருந்து செயற்கையாக உருவாக்கி, பாதிப்பு அடைந்தவர்களுக்கு செலுத்தி பரிசோதித்தோம்.
அந்த சோதனையில், சிலரிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அதற்கான காரணிகளை ஆராய்ந்து, மனிதனின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செல்லை அடையாளம் கண்டுள்ளோம். இத்தகைய செல்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள எய்ட்ஸ் தடுப்பூசி, எச்.ஐ.வி., பாதிப்புக்கு ஆளானவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.