தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்று வெல்லப்போவது யார்? இங்கிலாந்தா நியூசிலாந்தா?

nz-vs-eng-1424351891-2336101ஆறா­வது உலகக் கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்­டியில் விளை­யாடப் போகும் முத­லா­வது அணி எது என்­பதைத் தீர்­மா­னிக்கும் நியூ­ஸி­லாந்­துக்கும் முன்னாள் சம்­பியன் இங்­கி­லாந்­துக்கும் இடை­யி­லான முத­லா­வது அரை இறுதி போட்டி டெல்லி ஃபெரோஸ் ஷா கொட்லா விளை­யாட்­ட­ரங்கில் இன்று இரவு 7 மணிக்கு மின்­னொ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது. நடந்து முடிந்த சுப்பர் – 10
போட்­டி­களின் பெறுபே­று­களின் அடிப்ப­டையில் இது­வரை தோல்வி அடை­யாமல் இருக்கும் ஒரே ஒரு அணி­யான நியூ­ஸி­லாந்து இறுதி ஆட்­டத்தில் விளை­யாடும் தகு­தியைப் பெறும் என நம்­பப்­ப­டு­கின்­றது. எனினும் எதிர்­பா­ராத முடிவைத் தர­வல்ல அணி­யாக இங்­கி­லாந்து தென்­ப­டு­வதை மறுப்­ப­தற்­கில்லை. கேன் வில்­லி­யம்சன் தலை­மை­யி­லான நியூ­ஸி­லாந்து, இம்­முறை சுப்பர் – 10 குழு –2 இல் இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் ஆகிய நாடு­களை இல­கு­வாக வெற்­றி­கொண்டு அரை இறுதி வாய்ப்பை பெற்­றது.
இவ்வணியில் மார்ட்டின் குப்டில், வில்­லி­யம்ஸன், கொலின் முன்ரோ, கோரி அண்­டர்சன், ரொஸ் டெய்லர், க்ரான்ட் எலியட், லூக் ரொன்ச்சி ஆகிய அதி­ரடி துடுப்­பாட்ட வீரர்கள் இடம்­பெ­று­வ­துடன் இவர்­களில் கோரி அண்­டர்சன், கேன் வில்­லி­யம்ஸன், க்ரான்ட் எலியட் ஆகியோர் சக­ல­துறை வீரர்­க­ளாவர். பந்­து­வீச்சில் அடம் மில்னே, மிச்செல் மெக்­ல­நகான், மிச்செல் சென்ட்னர், இஷ் சோதி ஆகியோர் சிறப்­பாக செயல்­ப­டக்­கூ­டி­ய­வர்கள்.
அணித் தலைவர் ஒய்ன் மோர்கன், ஜேசன் ரோய், அடம் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி ஆகியோர் இங்­கி­லாந்தின் துடுப்­பாட்ட வரி­சைக்கு வலு­சேர்க்­கின்­றனர்.
இவர்­களில் மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சக­ல­துறை வீரர்­க­ளாகத் திகழ்­கின்­றனர். பந்­து­வீச்சில் க்றிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், டேவிட் வில்லி, ரீஸ் டொப்லே ஆகியோர் பந்­து­வீச்சில் பிர­தான பங்கு வகிக்­கின்­றனர்.
இரண்டு அணி­களும் சர்­வ­தேச இரு­பதுக்கு 20 கிரிக்கெட்டில் ஒன்­றை­யொன்று 13 தட­வைகள் சந்­தித்­துள்­ளன. இங்­கி­லாந்து 8 – 4 என்ற அடிப்­ப­டையில் முன்­னிலை வகிக்­கின்­றது.
இந்த சுற்­றுப்­போட்­டியில் மும்­பை­யிலும் டெல்­லி­யிலும் மாத்­தி­ரமே இங்­கி­லாந்து விளை­யா­டி­யுள்­ளது. ஆனால் நியூ­ஸி­லாந்து 4 இடங்­களில் விளை­யா­டி­யுள்ள­துடன் இப்­போது டெல்­லியில் அரை­யி­று­தியை எதிர்­கொள்­ள­வுள்­ளது.
முத­லா­வது அரை இறுதிப் போட்­டி நடைபெறும் டெல்­லியில் இங்­கி­லாந்­துக்கு அனு­பவம் இருப்­பதால் அவ்­வ­ணிக்கு சாத­க­மாக இருக்கும் என நியூ­ஸி­லாந்து அணித் தலைவர் வில்­லி­யம்ஸன் கூறினார்.
ஆனால் இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் எதுவும் நிக­ழலாம் என கேன் வில்­லி­யம்ஸன் கூறு­கின்றார். இந்தப் போட்டி குறித்து இங்­கி­லாந்து அணித் தலைவர் மோர்கன் தெரி­விக்­கையில், அணிக்கு தெரி­வா­கி­யுள்ள சகல வீரர்­களும் தங்­களால் ஆன அதி­க­பட்ச பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்­ளனர் என நான் கரு­து­கின்றேன். 20 ஓவர் கிரிக்கெட் போட்­டி­களில் நிறைய விட­யங்­களைக் கற்­றுக்­கொள்­வதில் மிகுந்த ஆர்வம் செலுத்­தி­வந்­துள்­ளனர்.
கடந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது அவுஸ்­தி­ரே­லி­யாவும் நியூ­ஸி­லாந்தும் வெளிப்­ப­டுத்­திய ஆற்­றல்­களை விஞ்சும் வகையில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என நாங்கள் திட்டமிட்டோம்.
அது கிட்டத்தட்ட கைகூடி யுள்ளது. எனவே இன்றைய போட்டியில் திறமையாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம் என்று மோர்கன் மேலும் தெரிவித்தார்.

 

Comments
Loading...