தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டு மக்களுக்கு மஹிந்த விசேட அறிவிப்பு ஒன்றை விடுவிப்பார்

மஹிந்தவின் கூட்டு எதிர்கட்சியினர் முக்கியமான தீர்மானங்கள் எடுப்பது குறித்து,  இம்மாதம் 21ஆம் திகதி கொழும்பில் கூடி முக்கியமான தீர்மானங்களை எடுக்கவுள்ளனர்.mahinda

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தின், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மே தினப் பேரணி தொடர்பில் ஆராயப்படவுள்ளது. அதன் பின்னர் மஹிந்த நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை விடுவிப்பார் என்றும் கூட்டு எதிர்கட்சியினர் குறிப்பிடுகின்றனர். புதுவருடத்துக்குப் பின்னர் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் மேதின நிகழ்வுகளை தனித்து நடத்துவது தொடர்பில் விசேடமாக ஆராயவுள்ளதாகவும் கூட்டு எதிர்கட்சியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

கடந்த முறையைப் போன்று இம்முறையும் பொது எதிரணியினர் மே தின நிகழ்வுகளை தனித்துக் கொழும்பில் நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், மஹிந்தவிற்கு ஆதரவான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலரும் அதில் பங்கேற்கவுள்ளதாகவும்  அவர் கூறினார்.

Comments
Loading...