Designed by Iniyas LTD
திமுக – அதிமுக அரசியல் கட்சிகளின் மீது 37 வழக்குகள் பதிவு
சேலம் மாவட்டத்தில் இது வரை திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் மீது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர் வருகை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வா.சம்பத் தலைமையில் நடைபெற்றது. நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்களின் செலவு கணக்குகளை பார்வையிட தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள் அடுத்த வாரத்தில் சேலம் வருகை தரவுள்ளதால், மாவட்ட அளவில் தேர்தல் செலவினம் தொடர்பாக வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சிகளின் செலவினக் கணக்கை தணிக்கை செய்யும் அலுவலர்களை நெறிபடுத்தும் வகையில் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்தல் செலவினங்கள் தணிக்கை செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சம்பத் புகார்களின் அடிப்படையில் திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் மீது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.