Designed by Iniyas LTD
Comments
Trending
ஈராக்கிய நகரொன்றில் இந்த மரணதண்டனை நிறைவேற்றம் இடம்பெற்றுள்ளது.
அந்தக் காணொளிக் காட்சியில் குறிப்பிட்ட நபரை முக மூடிணிந்திருந்த தீவிரவாதிகள் உயர்ந்த மாடிக் கட்டடமொன்றின் கூரைப் பகுதிக்கு தள்ளிச் செல்கின்றனர்.
இதனையடுத்து தீவிரவாதியொருவர் குறிப்பிட்ட கைதியால் மேற்கொள்ளப்பட்ட குற்றம் தொடர்பில் விபரிக்கிறார்.
தொடர்ந்து கைகளும் கால்களும் கட்டப்பட்ட அந்தக் கைதி அந்த மாடிக் கட்டடத்தில் தரையிலிருந்து சுமார் 100 அடி உயரமான கூரைப் பகுதியிலிருந்து தள்ளிவிடப்படு கிறார்.
மேற்படி மரணதண்டனை நிறைவேற்றக் காட்சியை தரையில் கூடியிருந்த சிறுவர்கள் உள்ளடங்கலான பெருந்தொகையான மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான தரவுகளின் பிரகாரம் சிரியா மற்றும் ஈராக்கில் முறையற்ற பாலியல் தொடர்புகள் குறித்து குறைந்தது 36 ஆண்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் மரணதண் டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Close
Recover your password.
A password will be e-mailed to you.