தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெயும் கருணாநிதியும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் – ராமதாஸ்

 ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தில் கருணாநிதி,  ஜெயலலிதா இருவருமே குற்றவாளிகள்தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  ramadass

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அறிக்கை வெளியிட்டார் என்றும், அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுத்திருந்தால் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எந்த தடையும் ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல்  மாநிலங்களவையில் ஜெயலலிதாவின் ஆதரவு மத்திய அரசுக்கு அவசியம் என்பதால் ஜெயலலிதா அழுத்தம் கொடுத்திருந்தால் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு சாத்தியமாகியிருந்திருக்கும் என்றும் ராமதாஸ் சுட்டிகாட்டியுள்ளார். ஆனால், ஊழல் வழக்கில் தப்ப மத்திய அரசிடம் உதவி கேட்ட ஜெயலலிதா, ஜல்லிக்கட்டுக்காக அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், அடுக்கடுக்காக துரோகங்களை செய்து விட்டு ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக செயல்படுவது போல நடித்து தமிழ்நாட்டு மக்களை முட்டாள்களாக்கும் முயற்சியில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஈடுபடாமல் இருப்பதே நல்லது என ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...