தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பசில் ராஜபக்ஷ மீண்டும் கைது!

basil-policeபசில் ராஜபக்ச சற்று முன்னர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹாவிலுள்ள நிலம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இன்று திங்கட்கிழமை நிதி குற்றப் புலானாய்வு பிரிவிற்கு விசாரணைகளுக்கான அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே விசாரணைகளின் பின்னர் பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், பூகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, கடந்த மாதம் மாத்தறையில் கொள்வனவு செய்யப்பட்ட காணி விவகாரம் தொடர்பில் பசில் ராஜபக்ச கைது செய்யபட்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் திவிநெகும நிதி மோசடி தொடர்பில் கடந்த ஆண்டு  இவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...