தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுவாதி கொலையாளி ராம்குமார் இன்று நுங்கம்பாக்கம் கொண்டு செல்லப்படுகிறார்!

14-1468467743-ramkumar3465பொறியாளர் சுவாதி கொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ராம்குமாரிடம் போலீசார் நேற்று இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தினர். இன்றைய விசாரணையின் போது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொலை செய்தது எப்படி என ராம்குமார் நடித்துக் காட்ட இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கடந்த 1-ந்தேதி கைது செய்யப்பட்டார். 

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்கான அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ராம்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீதான விசாரணைக்காக ராம்குமார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து ராம்குமாரை ரகசிய இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா? என்பதும் குறித்தும் போலீசார் விசாரித்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு ராம்குமார் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சுவாதியை எப்படி கொலை செய்தார் என நடித்துக் காட்டுமாறு போலீசார் கூற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments
Loading...