Designed by Iniyas LTD
பிரித்தானியாவில் நடைபெற்ற ‘இலங்கை அரசியல் யாப்பு’ நூல் வெளியீடு!
ஈழத்து மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய ” இலங்கை அரசியல் யாப்பு” (டொனமூர் முதல் சிறிசேன வரை) நூல் வெளியீடு நேற்று பிரித்தானியாவில் நடைபெற்றது.இந்த நூல் வெளியீடு நேற்றைய தினம் இலங்கையில் வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய மண்டபத்திலும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு லண்டன் – ஈஸ்ட்ஹாம் பகுதியில் அமைந்துள்ள Trinity Community Centre நேற்று மாலை 5:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு இரௌ 10:00 மணி வரை இடம்பெற்றது.
தமிழ் ஆய்வு மையத்தின் வெளியீடாக இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை ஊடகவியலாளர் சு.பா.ஈஸ்வரதாஸ் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார்.
மங்கள விழக்கை முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் பொன்.சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
அதன் பின்னர் நூலின் அறிமுக உரையினை நூலகவியலாளர் திரு.என். செல்வராஜா அவர்களும், வெளியீட்டுரையினை ஊடகவியலாளர் திரு.தி.திபாகரன் அவர்களும் நிகழ்த்தினர்
நூலின் பிரதிகளை திரு.பொ.சத்தியசீலன் அவர்களும், திரு.என்.செல்வராஜா அவர்களும் வழங்க மூத்த ஊடகவியலாளரும், முன்னாள் பிபிசி அறிவிப்பாளருமான திருமதி,ஆனந்தி சூரியப்பிரகாசம், பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த திரு.ரவிச்சந்திரன், மற்றும் திரு.பத்மநாப ஐயர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து சிறப்புரையினை தமிழீழ பொருளாதார ஆய்வாளர் திரு.பாலா மாஸ்ரர் அவர்கள் நிகழ்த்தினார். இதன் பின்னரான ஆய்வுரைகளை ஆய்வாளர் திரு.காதர், ஊடகவியலாளர் திரு.கோபிரட்ணம், ஊடகவியலாளர் திரு.கே.வி.நந்தன், மு.திருநாவுக்கரசு அவர்களின் மாணவர்களான திருமதி.திரிவேணி சதீஸ் (அரசியல் விஞ்ஞானத்துறை), திரு.சேனாதி முத்தைய்யா (பொருளியல்துறை) தமிழ்த்தோழமை இயக்கத்தை சார்ந்த செல்வி.பாரதி ஆகியோர் நிகழ்த்தினர்
இவ் நூலின் ஆசிரியர் மு.திருநாவுக்கரசு அவர்கள் இணையவழியாக மக்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கியதை அடுத்து இறுதியாக ஊடகவியலாளர் அ.மயூரன் அவர்கள் நன்றியுரையினை வழங்க நிகழ்வுகள் நிறைவு பெற்ரது.
இரே நாளில் தாயகத்திலும், பிரித்தானியாவிலும் நடைபெற்ர இந்த நிகழ்வுகளில் வவுனியாவில் 700 க்கும் அதிகமான மக்களும், பிரித்தானியாவில் நூற்றுக்கும் அதிகமான மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



