தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாருக்கானுக்கு மான் தோலில் ஷூ தயாரித்தவர் சிறையில் அடைப்பு!

201608281038418748_Pakistani-man-jailed-for-making-deer-skin-sandals-Shah-Rukh_SECVPFபாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் இந்தி நடிகர் ஷாருக்கானின் உறவினர் தங்கியுள்ளார். அவர் ஷாருக்கானுக்கு புகழ் பெற்ற பெஷாவர் ‘ஷு’ பரிசளிக்க முடிவு செய்தார்.

அதற்காக ‘ஷு’ தயாரிப்பாளர் ஜகாங்கீர்கான் என்பவரை சந்தித்து 2 ஜோடி ‘ஷு’க்கள் தயாரித்து தரும்படி கேட்டார். ஷாருக்கானுக்கு ‘ஷு’ ஆர்டர் கொடுத்ததை அறிந்த ஜகாங்கீர்கான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில் அவர் ஷாருக்கானின் தீவிர ரசிகர் ஆவார்.

இவர் ஷாருக்கானுக்கு விசே‌ஷமாக மான்தோலில் ‘ஷு’ தயாரித்தார். இதை அறிந்த போலீசார் ஜகாங்கீர் கானின் தொழிற்சாலையை சோதனை நடத்தினர்.

அங்கு மான்தோலில் தயாரிக்கப்பட்ட ‘ஷு’ இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். கொல்லப்பட்ட வன விலங்குகளின் தோலில் இருந்து செருப்புகள் முதலான பொருட்கள் தயாரிப்பது குற்றமாகும்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜகாங்கீர்கானுக்கு அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments
Loading...