தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வேளாண் விளைநிலங் களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது- ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் அங்கீகரிக் கப்படாத வீட்டு மனைகள் மற்றும் அவற்றில் கட்டப் பட்டுள்ள வீடுகளை பத்திரப் பதிவு செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.ramados

அதேபோல், வேளாண் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. வேளாண் விளைநிலங் கள் மனைகளாக மாற்றப் படுவதாலும், அங்கீகரிக்கப் படாத வீட்டுமனைகளில் கட்டிடங்களை கட்ட அனு மதிப்பதாலும் சூழலியலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது; மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இந்த பாதிப்புகளை தடுக்கும் நோக்குடன் தான் இந்த தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் பின்னணியில் உள்ள உயர்நீதிமன்றத்தின் நோக்கம் மிகவும் மேன்மையானது; பொதுநல நோக்கம் கொண் டது.

ஆனால், உயர்நீதிமன்றத் தின் தீர்ப்பு தெளிவாக இல்லாமல் பொதுவானதாக இருப்பதால் அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் சொத்துக்களை அவசரத் தேவைக்கு கூட விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. வேளாண் விளைநிலங் களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத் தக்கது. அதிலும் குறிப்பாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யப் படாத நிலங்களை வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்யும் போக்கு அண்மைக் காலமாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தான் வெள்ளம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. அதேபோல், இயற்கை மாற்றத்தாலும், பாசன வசதி இல்லாததாலும் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாய நிலங்களாக இருந்தவை இப்போது வீட்டுமனைகளாக மாற்றப் பட்டிருக்கின்றன. இவை வேளாண்மைக்கு தகுதியற் றவை என்பதால் இவ்வாறு மாற்றப்பட்டிருக்கின்றன. இவற்றால் சூழலியலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது; இவை நீரோட்டத்தைத் தடுத்து வெள்ளம் ஏற்பட காரணமாக இருப்பதில்லை. மற்றொருபுறம் தமிழக மக்களில் பெருமளவிலான வர்களுக்கு சொந்த வீடு இல்லாததால், தங்களிடம் இருக்கும் குறைந்த பணத் திற்கு ஏற்ப கிடைத்த நிலத்தை வாங்கி வீடு கட்டிக் கொள்கிறார்கள். இத்தகைய நிலங்களையும், வீடுகளையும் பத்திரப் பதிவு செய்வது அவர்களை கடுமையாக பாதிக்கும்.

எனவே, விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எந்தவித சமரசமும் இல்லாமல் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண் டும். அதேநேரத்தில், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் அனைத்தையும் ஆய்வு செய்து, அவற்றில் எவையெல்லாம் சூழலியல் மற்றும் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தாதவையோ அவற்றை மட்டும் முறைப் படுத்தி அங்கீகாரமும், பத்திரப்பதிவு அனுமதியும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Comments
Loading...