தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுலக்சன் வீட்டின் முன் நின்றவர்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த யாழ். பல்கலைகழக மாணவனான விஜயகுமார் சுலக்சன் வீட்டுக்கு அருகில் நின்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது இலக்க தகடற்ற ஜீப் ரக வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர்.sulaxsan

சுன்னாகம் கந்தரோடை ஆலம்பிட்டி சந்திக்கு அருகில் நேற்று இரவு 7 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவனின் வீட்டுக்கு முன்பாக உள்ள ஆலம்பிட்டி சந்தி பகுதியில் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஊரார் கூடி இருந்தனர். அவ்வேளை, இலக்க தகடற்ற ஜீப் ரக வாகனத்தில் வந்த குழுவினர் அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். அதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினார்கள். அதனை அடுத்து தாக்குதலாளிகள் அந்த இடத்தில் இருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...