தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் மாவட்ட பொது மக்கள் குறைகேள் மையம்

யாழ். மாவட்டத்தில் வசிக்கும் மக்களை சமூக பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட பொது மக்கள் குறைகேள் மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளை பக்கச்சார்பற்ற முறையில் உடனடியாக நிறைவேற்றுவதற்கு மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  kurai

இதேவேளை 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது கடிதம் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இக் குறைகேள் மையத்துக்கு பொதுமக்கள் தகவல் வழங்கும்போது சம்பவம் தொடர்பான துல்லியமான தகவல்களையும், புகைப்படம், காணொளி போன்ற ஆதாரங்களையும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், இவ் அலுவலகத்தில் பொது மக்களால் வழங்கப்படும் தகவல்கள் தொடர்பான இரகசியம் காக்கப்படவேண்டிய சந்தர்ப்பங்களில் அவை தொடர்பாக இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே பொதுமக்கள் துணிந்து தமது குறைகளை வழங்கும்போது வழங்குனர் பற்றிய விபரங்களை பயமின்றி தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...