Designed by Iniyas LTD
பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது – ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கோவை பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் நியமனத்தில் நடக்கும் முறைகேட்டைத் தடுக்க வேண்டும் என குரல் எழுப்பிய போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் நியமனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருக்கிறது. 
இந்தியாவின் எதிர்காலத்தூண்களை உருவாக்கும் பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தும்படியும் எச்சரிக்கை விடுத்த பிறகும் ஊழலை ஒழிக்காமல், ஊழல் பணத்தை பகிர்ந்து கொள்வதற்காக ஒப்பந்தம் செய்து கொள்வதை பார்க்கும் போது அரசு நிர்வாகத்தில் ஊழலைத் தவிர வேறு ஒன்றுமே நடக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.
எனவே, இந்த பிரச்சினையில் தமிழக கவர்னர் உடனடியாக தலையிட்டு 2 பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) விசாரணைக்கு கவர்னர் ஆணையிடவேண்டும்.