Designed by Iniyas LTD
மருத்துவமனையில் இருந்து கருணாநிதி வீடுதிரும்பினார்!
உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு சரியாக 11.10 மணியளவில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவிரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் சிகிச்சைக்குப் பின் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில், ”தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய்த்தொற்றால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. நோய்த்தொற்றை குணப்படுத்த மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, காவேரி மருத்துவமனையில் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி கடந்த 7-ம் தேதி வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.