தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் வடமராட்சியில் பெண் வெட்டிக்கொலை!

1462780249-0555யாழ்.மாவட்டம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொற்பதி கிராமத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையர்கள் உறங்கிக் கொண்டிருந்த குடும்பப் பெண்ணொருவரை வாளினால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர் பொற்பதி, குடத்தனையைச் சேர்ந்த தங்கவேலாயுதம் கமலாதேவி (62) என்பவராவார்.
இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை

Comments
Loading...