Designed by Iniyas LTD
பற்றி எரிகிறது தமிழகம்! மாணவர் போராட்டத்தை குழப்ப இந்திய அரசின் சதி?
ஜல்லிக்கட்டு நடத்த கோரி கடந்த 7 நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் சில விஷமிகளின் காரணமாக வன்முறை வெறியாட்டமாக மாறியுள்ளது. காவல்துறையினர் மீது கலவரக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் 32 போலீஸ் மற்றும் 2 துணை ஆணையர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்வீச்சில் காயம் அடைந்த போலீசாருக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் தீவைக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மயிலாப்பூர் டி.வி. கோயில் தெருவில் உள்ள போலீஸ் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் காவல்துறை பேருந்து, வேன் ஆகியவற்றை தீயில் எரிந்து சாம்பலாகின. கலவரத்தை ஒடுக்க போலீஸ் தடியடி நடத்தியது. இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். கல்வீசியவன், தீ வைத்தவன் தப்பித்துக்கொள்ள அப்பாவி மாணவர்கள் காயமடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு தடியடியைக் கண்டித்து பல பகுதிகளில் மக்கள் போராடி வருகின்றனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சென்னை தியாகராய நகரில் பாண்டிபஜார் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அலுவலகங்கள் அவசரம் அவசரமாக விடுமுறை விடப்பட்டன. பலர் பிற்பகலில் வீடு திரும்பினர். மாநகர போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
பள்ளிகள் விடுமுறை பள்ளிகளில் இருந்து உடனடியாக அழைத்து செல்லுமாறு பெற்றோர்களுக்கு அழைப்பு வந்தது. மாணவர்கள் உடனடியாக பெற்றோர்களுடன் பாதுகாப்பாக வீடு திரும்பினர். ஒருவித பதற்ற நிலையே காணப்பட்டது.
மீன் சந்தைக்கு தீவைப்பு அயோத்தி குப்பம், நடுக்குப்பம் மீன் சந்தைக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். இதே போல சிட்டி சென்டர் அருகே அம்பேத்கார் பாலம் அருகே கலவரக்காரர்கள் போலீஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கலவரக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். மயிலாப்பூர் பகுதியே போர்களமாக மாறியுள்ளது.
சில இடங்களில் போலீசாரே தங்களது வாகனங்களுக்கு தீ வைத்துள்ளதாகவும்,அதன்பின்னர் மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடனடியாக நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.
போலீஸ் எச்சரிக்கை மெரினாவை ஒட்டியுள்ள 9 சாலைகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மெரினா பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று காவல்துறை கூறியுள்ளனர். மேலும் சட்டம்-ஒழுங்கை பேணி காக்க மக்கள் காவல்துறைக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.