தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் கைதிகளை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தும் மகசின் சிறை!

new-magazine-prisonகொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை தினமும் நிர்வாணப்படுத்தி சோதனைக்கு உட்படுத்துவதாக முறையிட்டு, ஜனாதிபதிக்கு தமிழ் கைதிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதும் இதற்கெதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென கைதிகள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய அரசின் செயற்றிட்டத்தின் அடிப்படையிலேயே இச் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுவதாக தெரிவிக்கும் தமிழ் கைதிகள், தம்மையும் மனிதர்களாக, மானமும் உணர்வும் உள்ளவர்களாக மதித்து இச் செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Comments
Loading...