தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கனடாவில் மாயமானவர் 5 ஆண்டுகளின் பின் அமேசான் காட்டிலிருந்து மீட்பு!

625.500.560.350.160.300.053.800.748.160.70-2-5-450x301கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் இருந்து மாயமான நபர் ஒருவரை 5 ஆண்டுகளுக்கு பின்னர் அமேசான் மழைக்காடுகளில் இருந்து மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரொறொன்ரோவை சேர்ந்தவர் 39-வயதான அன்ரன் பிலிப்பா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தமது குடியிருப்பு பகுதியில் இருந்து மாயமானதாக கூறப்படுகிறது.

மாயமான நபரை தேடும் பொருட்டு இவரது சகோதரர் நிதி உதவிக்காக ஒரு நிதி திரட்டும் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

இந்த நிலையில் அன்ரன் பிலிப்பா எனப்படும் இவர் அமேசான் பகுதியில் பெரிய நகரம் ஒன்றின் நெடுஞ்சாலையில் அலைந்து திரந்து கொண்டிருக்கையில் அப்பகுதி பொலிசாரால் கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டார்.

இவர் தமது குடியிருப்பு பகுதியில் இருந்து 6500 மைல்கள் தொலைவில் உள்ள அமேசான் மழைக்காடுகள் பகுதிக்கு கால் நடையாகவே சென்றுள்ளது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது.

குழப்பமடைந்த நிலையில் பதட்டத்துடனும் பேச முடியாத நிலையிலும் குறித்த நபர் காணப்பட்டார் என கூறப்படுகிறது.

அவ்விடத்திற்கு சென்ற பொலிசாரிடம் தனது அடையாளங்கள் எதையும் தெரிவிக்க முடியாது திணறியதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து அதிகாரிகள் இவர் குறித்த தகவல்களை பிரேசிலியாவில் உள்ள கனடிய தூதரகத்திற்கு தங்களது பேஸ்புக் தகவல் மூலம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி இவர் குற்ற செயல்கள் எதுவும் செய்யாததால் பொலிசாரால் இவரை கைது செய்யவும் முடியவில்லை என தெரிவித்துள்ளனர். குறித்த தகவல் கிடைக்கப்பெற்ற கனடிய தூதரகம் இவரை அன்ரன் பிலிப்பா என அடையாளம் கண்டு இவரது சகோதரரான ரொறொன்ரோவில் வசிக்கும் ஸ்ரெவானிற்கு தகவல் தெரிவித்தனர்.

இவர் அலைந்து திரிந்த பகுதியானது கொடிய விலங்குள் நடமாடும் பகுதியாகும் என கூறப்பட்டுள்ளது. மாயமான தனது சகோதரர் குறித்த தகவல் கிடைத்த மகிழ்ச்சியில் ஜனவரி 3 ஆம் திகதி அவரது சகோதர் ஸ்ரெவான் பிரேசில் சென்று தனது சகோதரருடன் இணைந்து கொண்டார்.

வன்கூவரில் வசித்து வந்த தனது சகோதரர் அன்ரன் ஒரு நீண்ட கால வறுமை எதிர்ப்பு ஆர்வலர் எனவும் வன்கூவர் மொன்றியல் மற்றும் ரொறொன்ரோ தீவிரவாத சமூகங்களின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவித தகவலும் இன்றி கடந்த 2012 ஆம் ஆண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை கலங்க வைத்துவிட்டு காணாமல் போய்விட்டார் என சகோதரர் தெரிவித்தார்.

தான் உயிரோடு திரும்பி வந்து குடும்பத்தினருடன் இணைந்து கொண்டதால் மகிழ்ச்சியடைவதாக அன்ரன் தெரிவத்துள்ளார்.

Comments
Loading...