Designed by Iniyas LTD
தமிழக மீனவர் படுகொலைக்கு தாயக மீனவர்கள் கண்டனம்!
தலைமன்னார்க் கடற்பரப்பில் இந்திய மீனவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் கண்டனத்துக்குரியது என்று வடக்கு மாகாண கடற்றொழில் இணையச் செயலா் எம்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.தலைமன்னார்க் கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவா்களின் படகுகளில் இனந்தெரியாதோரின் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. இந்தச் சூட்டுச் சம்பவத்தில் படகில் இருந்த பிரிஜ்ஜோ (வயது-21) என்ற மீனவர் மீது குண்டுகள் பாய்ந்தன. ஒரு குண்டு அவர் கழுத்தைத் துளைத்தது. படகுக்கு உள்ளேயே அவர் சாவடைந்தார். சரோண் (வயது -–24) என்பவர் வலது கால், இடது கை போன்றவற்றில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார்.
இந்தச் சம்பவத்துக்கே அவர் கண்டனம் வெளியிட்டார்.
தொடர்புடைய பதிவு
வடக்கு மாகாண கடற்றொழில் இணையச் செயலா் மேலும் தெரிவித்ததாவது,இந்திய மீனவா்களாக இருந்தாலும் சரி, இலங்கை மீனவா்களாக இருந்தாலும் சரி, அவா்கள் தமது வாழ்வாதாரத்தை நோக்காகக்கொண்டு தொழிலுக்குச் செல்கின்றனா். அவா்களுடைய பாதுகாப்பு முக்கிய மானதாகும். அவா்களுடைய குடும்பம் அவா்களுக்காக காத்திருக்கும். அந்த வகையில் நேற்று நடைபெற்ற சம்பவம் வருத்தத்துக்குரியதும் கண்டனத்துக்குரியதும் ஆகும்.
இலங்கைக் கடற்படையினரால்தான் இவா் சுடப்பட்டார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் இது இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருப்பதால் இது தொடா்பாக நாம் எதுவும் கூறமுடியாது. இந்திய மீனவா்களின் எல்லை அத்துமீறல் தொடா்ந்த வண்ணம் உள்ளது. ஆனால் உயிர் பறிப்பு மூலம் அந்தப் பிரச்சினையைத் தீா்க்காமல் பேச்சுக்களின் மூலம் தீா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவா்களின் எல்லை அத்துமீறல் தொடா்பாக பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த வேளையில் இந்திய மீனவா்களின் மீது சுடப்பட்ட செய்தியானது வருத்தத்துக்கு உரியதாகும்.
இந்திய மீனவ நாட்டுப்படகு உரிமையாளா்கள் இழுவைமடித் தொழில் படகு உரிமையாளா்களுக்கு எதிராக நேற்று இராமநாதபுரம் மாவட்டத்தில் போராட்டம் நடத்தியிருந்தனா். போராட்டம் நடைபெற்று இரண்டு மணித்தியாலங்களின் பின்பு இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றார்