தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழமும் வேண்டாம் சமஷ்டியும் வேண்டாம்! மாகாண முறைமையே போதும்? தமிழ் கட்சிகள் தீர்மானம்

parliament_2மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்­க­ளைப்  பகிர்ந்தளிப்­ப­தன் அடிப்­ப­டை­யி­லேயே தீர்வை எட்­டு­வது என்ப­தில் அனைத்து அர­சி­யல் தரப்­பு­க­ளும் இணக்­கம் கண்­டுள்­ளன. புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­காட்­டல் குழு­வின் கூட்­டத்­தில் இந்த இணக்­கம் நேற்று எட்­டப்­பட்­டது.
கட்­சி­க­ளுக்கு இடை­யில்  குறிப்­பாக ஆட்­சி­யின் பங்­கா­ளிக் கட்­சி­யான சுதந்­தி­ரக் கட்­சி­யின் போக்­கில்  ஏற்­பட்ட முரண்­பா­டு­கள் கார­ண­மாக புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் முயற்­சி­கள் பின்­ன­டை­வைச் சந்­தித்­தி­ருந்­தன. அரச தலை­வ­ரின் முயற்­சி­களை அடுத்து சுதந்­தி­ரக் கட்சி வழிக்­குத் திரும்­பி­யது. அதைத் தொடந்து வழி­காட்­டல் குழுக் கூட்­டங்­கள் மீண்­டும் ஆக்­க­பூ­ர்வ­மான கலந்­து­ரை­யா­டல் திசைக்­குத் திரும்­பி­யி­ருந்­தன.
நேற்­றைய கூட்­டத்­தில் கூட்டு எதி­ர­ணி­யினர் உள்­ளிட்ட அனைத்து அர­சி­யல் தரப்­பி­ன­ரும் கலந்­து­கொண்­டனர். அதி­கா­ரப் பகிர்வு தொட­ர் பான விட­யங்­கள் முக்­கி­ய­மாக அங்கு ஆரா­யப்­பட்­டன. சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடல் நீடித்தது.
ஏற்­க­னவே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த, மாகாண முத­ல­மைச்­சர்­கள் அனை­வ­ரும் இணங்­கிக்­கொண்ட விட­யங்­கள் தொடர்­பான அறிக்கை, கடந்த காலங்­க­ளில் முன்­வைக்­கப்­பட்ட தீர்­வுப் பொதி­க­ளில் ஒத்­தி­ருந்த விட­யங்­கள் தொடர்­பான அறிக்கை என்­ப­வற்றை ஆராய்ந்து அல­சி­ய­தன் அடிப்­ப­டை­யில் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.
அதன் அடிப்­ப­டை­யில், அதி­கா­ரப் பகிர்­வுக்­கான அடிப்­ப­டை­யாக மாகாண சபை­க­ளைக் கொள்­வது என்று அனைத்­துத் தரப்­பு­க­ளும் இணங்­கின. அடிப்­படை மாகாண சபை­க­ளாக இருந்­தா­லும் அவற்றை இணைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­கள் இருக்­கக்­கூ­டாது என்ற வாத­மும் முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால் வடக்கு –  கிழக்கு இணைந்­தி­ருக்­க­வேண்­டும் என்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கருத்­தும் வலி­யு­றுத்­தப்­பட்­டது. எனி­னும் இது தொடர் பில் இறுதி முடிவு எது­வும் எட்­டப்­ப­ட­வில்லை.
இன்­றும் கலந்­து­ரை­யா­டல் தொடர்ந்து இடம்­பெ­றும். அதி­கா­ரப் பகிர்வு குறித்த கலந்­து­ரை­யா­டல் அனே­க­மாக இன்று இறுதி செய்­யப்­பட்டு தீர்க்­க­மான முடிவு எடுக்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.  அது நடந்து முடிந்­தால் இனி­வ­ரும் கூட்­டங்­க­ளில் அர­சின் தன்மை, பௌத்த மதத்­துக்­கான இடம், நிறை­வேற்று அரச தலை­வர் முறைமை, தேர்­தல் முறைமை என்­பன தொடர்­பான கலந்­துரை­ யாடல் இடம்­பெ­றும் என்று தெரி­கி­றது.
Comments
Loading...