தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டாஸ்மாக்கிற்கு எதிர்ப்பு: வீட்டுக்கு வீடு கருப்பு கொடி கட்டி போராட்டம்

tasmacகடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ளது கட்சிபெருமாநத்தம். இந்த கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை இருந்தது. இந்தக் கடையை எடுக்கக் கோரி அக்கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனால் அங்கிருந்து அந்த கடை எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் வைக்கக்கூடாது என்ற உத்தரவால், அந்தக் கடைகளை வேறு எங்கு வைப்பது என்று டாஸ்மாக் அதிகாரிகள் இடம் தேடிக் கொண்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விளாங்காட்டூர் என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை 3 கி.மீ. தொலைவில் உள்ள கட்சிபெருமாநத்தம் கிராமத்திற்கு மாற்ற  திட்டமிட்டனர்.

இதனை அறிந்த  கட்சிபெருமாநத்தம் கிராம மக்கள் டாஸ்மாக் கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

Comments
Loading...