Designed by Iniyas LTD
காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்?? மங்கள
“காணாமற்போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம். காணாமற்போனவர்களாக கருதப்படுபவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம்” இவ்வாறு அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
தொடர்புடைய பதிவு
அயலுறவு அமைச்சில் நேற்றுமுன் தினம் மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காணாமற் போனோ ரின் பிரச்சினை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச் சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“காணாமற்போனவர்களை கண்டுபிடிப்பதற்கான முழு முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ் மக்களும் ஆதரவு வழங்க வேண்டும்” என்று அமைச்சர் மங்கள மேலும் தெரிவித்தார்.