தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரண்டு லட்சம் முஸ்லிம் மக்கள் ஸ்ரீ ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட திட்டம்?

download (1)வில்பத்து சரணாலயம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படாவிட்டால்   15   ஆயிரம்   முஸ்லிம்களை இணைத்து  ஜனாதிபதி செயலகத்தை  முற்றுகையிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் எச்சரிக்கை  விடுத்துள்ளனர்.

அவ்வாறு போராட்டம் நடத்தியும் தமது பிரச்சினைகளை ஜனாதிபதி கவனத்தில்     கொள்ளாவிட்டால் நாடு முழுவதும் உள்ள 20 இலட்சத்திற்கும் அதிகமான   முஸ்லிம்களால் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வில்பத்து சரணாலயம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலால்  முசலிப் பிரதேச மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் சுவிகரிக்கும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி  இன்று 15 ஆவது நாளாக  தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மறிச்சிக்கட்டி சக்கியா பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்ஸீம் மக்களினால் இந்த போராட்டம்  தொடர்ந்துமுன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வில்பத்து வனப்பகுதிக்கு வடக்கு திசையில் அமைந்துள்ள 04 வனப் பிரதேசங்களையும் வில்பத்து வனத்துடன் இணைத்து பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பெயரிடும் வர்த்தமானி கடந்த மாதம் ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்டது.

இந்த வர்த்தமானியின் மூலம் தற்போது மக்கள் வாழ்ந்துவரும் கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் ஆகியன அரசாங்கத்திற்கும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் என கையகப்படுத்தப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக்காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும்இ மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்இ குறித்த பகுதியில் உள்ள காணிகள் தமக்கானது என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அண்மித்ததாக காணப்படும் வனப் பகுதியினதும் பிரதேச மக்களினதும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடனேயே இந்த வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக கடந்த மாதம்  30 ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது வாழ்ந்து வரும் மற்றும் மக்களுக்கு சட்டபூர்வமான உரிமை காணப்படும் கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய வணக்க ஸ்தலங்கள் ஆகிய எதுவுமே இந்த வர்த்தமானியின் ஊடாக அரசாங்கம் கையேற்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியிருந்தது.

இதேவேளை சர்ச்சைக்குரிய வில்பத்து சரணாலயத்திற்கு வடக்கே முசலிப் பிரதேச மக்களின் பூர்வீகக் காணிகளை உள்ளடக்கி அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்ய வேண்டும் என கோரி, முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளமையுட்  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...