Designed by Iniyas LTD
சிறீலங்காஅரசை நம்பமுடியவில்லை. பிரித்தானியா தெரிவிப்பு.

சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள், மற்றும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் என்பன உரிய முறையில் இடம்பெறுவதாக தம்மால் நம்பமுடியவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதம் ஒன்றில் பதிலளித்த வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் , சிறீலங்கா அரசுமீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புதிதாகசொல்லக்கூடிய அளவு முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
விசாரணைகளை நடத்துவதற்காக சிறீலங்காஅரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் விசாரணைகளை நம்பமுடியவில்லை. இந்தநிலையில் 2014 ம் மார்ச் மாதத்துக்கு முன்னர் போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பத்தக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்படாவிடின் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் யோசனையின் மீது சர்வதேச விசாரணையை கோரவுள்ளதாகவும் மேலும் ஸ்வைர் குறிப்பிட்டார்.