Designed by Iniyas LTD
புலிகளின் ஆயுதங்களை தேடிய அதிரடிப்படையினருக்கு இறுதியில் கிடைத்தது?
இறுதி யுத்தக் களங்களாக காணப்பட்ட முல்லைத்தீவு – பச்சை புல்மோட்டைவெளி, புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் விடுதலைப்புலிகளின் அயுதங்களை தேடிய அதிரடிப்படையினருக்கு இறுதியில் ஏமாற்றமே கிடைத்துள்ளது.குறித்த பகுதியில், ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து, முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.நேற்று மாலை 4.20 மணியளவில் மாவட்ட நீதிபதி எஸ்.எம்.எஸ்.சம்சுதீன் முன்லையில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதிகளில் சுமார் 16 அடி ஆழம் வரை தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்களோ, அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களோ கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.