தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாம் அரசியல் ரீதியாக பிரிந்திருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் இணைந்துள்ளோம் என கூறி விக்னேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கைலாகு கொடுத்தார்.

fb44e1e637744136be939d61f62c5b93

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாணவர் விடுதி திறப்பு விழா இடம்பெற்றது. 6 கோடி ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கும் இந்த நிகழ்வு அதன்அதிபா் எஸ். தெய்வேந்திராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லுாரியின் பழைய மாணவரும் ஜோ்மனி பிரஜையுமான எஸ்.கரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாணவா் விடுதியை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு ஜோ்மனியின் துாதுவர் மற்றும் வடமாகண முதலமைச்சா் சி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கைலாகு கொடுத்தவாறே அரசியல் ரீதியில் நாம் பிரிந்திருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் இணைந்துள்ளோம் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாம் கைலாகு கொடுப்பது எனக்கு பெரிய விடயமும் அல்ல பிரச்சினையும் அல்ல ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கோ பெரிய பிரச்சினை என சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...