தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை!

நாடு முழுவதிலும் உள்ள கரையோரப் பிரதேசங்களில் இன்றைய தினம்(05) சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாடொன்றை முன்னெடுக்கப்போவதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால், கரையோரப் பகுதிகளிலுள்ள மக்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுவதுடன், இதற்காக வளிடண்டலவியல் திணைக்களத்தின் உதவியையும் பெற்றுக்கொள்ளப் போவதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பலி தெரிவித்தார்.

குறித்த, ஒத்திகை நடவடிக்கை இன்று(05) பிற்பகல் ஆரம்பமாக இருக்கின்றது.

Comments
Loading...