தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த கடல் கண்காணிப்பை அதிகரிக்கும்சிறீலங்கா விமானப்படை! –

images

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறீலங்கா விமானப்படையினர் கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் பற்றிய தகவல்களை திரட்டி உரிய தரப்பினருக்கு வழங்கப்படும். இதற்கு கடல் கண்காணிப்பு பணிகளை விஸ்தரிக்க வேண்டும். விமானங்களையும் ஏனைய கருவிகளையும் பயன்படுத்தி அத்துமீறல்கள் தொடர்பில் கண்காணிப்பு நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...