Designed by Iniyas LTD
பிரதமர் மன்மோகன் சிங், அங்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்
மியான்மரில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அங்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, ஈழத் தமிழர்களின் நலன்களை பேணவும், தமிழக மீனவர்கள் பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ராஜபக்சேவை, பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த முக்கியக் கட்சிகள் பலவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், இரு தலைவர்களின் சந்திப்பு இன்று நடந்துள்ளது.