Designed by Iniyas LTD
புலிப்பயம் விட்டுப்போன ஸ்ரீ கடற்படை! தமிழக மீனவர்கள் மீது சராமாரியாக கல்வீச்சு
இந்திய எல்லையில் இலங்கை கடற்படையினர் கற்கல் பாட்டில்கள் கொண்டு மீனவர்களை விரட்டியடித்த சம்பவத்தால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடியது.
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை சிறைகளிலுள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்சக்கோரிக்கைகளை வழியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக வேலை றிறுத்தப் போராட்டத்திற்கு பின் நேற்று சனிக்கிழமை(18) காலை 500 க்கும் குறைவான படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று சுமார் இரண்டாயிரத்தறிக்கும் மேற்ப்பட்டோர் மீன்பிடிக்கச் சென்றனர்
இவர்கள் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும்; இடையே மீன்பிடிக்க முயன்ற போது இந்திய எல்லைப்பகுதியில் ஏழுக்கும் மேற்ப்பட்ட இலங்கை ரோந்துக்கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பாட்டில்கள், கற்கள் கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளை மீனவர்கள் மீது சரமாரியாக வீசி எரிந்து அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால நள்ளிரவில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் படகுகளை நிறுத்தி கைது நடவடிக்கைளுக்கு அஞ்சி படகுகளிலிருந்த விளக்குகளை அணைத்துவிட்டு காத்திருந்தனர்.
இதனையடுத்து இலங்கை கடற்படையினர்களது ரோந்துக்கப்பல்களிலிலுள்ள ராட்சத மின்விளாக்கால் மீண்டும் மீனவர்களை விரடடியுள்ளனர்.
மேலும் இருநூற்றுக்கும்; மேற்ப்பட்ட படகுகளிலிருந்த ; வலைகளை வெட்டியதோடு இனி மின்பிடிக்க வரக்கூடாது எனமிரட்டியதாகவும் பாதிக்ப்பட்டு கரை திருமிய மீனவர்கள வேதனையோடு தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்ப்படையினரின் இந்த அத்துமீறலால் படகுகளுக்கு தலா ரூ30 ஆயிரம் முதல் ரூ 60 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவத்துள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் மீனவர் பிரச்சினையில் கவணம் செலுத்தி இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் நடு கடலில் பிரச்சினைகள் இல்லாமல் மீன்பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக் வேண்டும்.
இல்லையேல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலே இல்லாமல் மீனவர்கள் வறுமையால் அழிந்து போவார்கள் என வேதனை தெரிவித்துள்ளனர்.