தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிணைக் கைதிகளை மீட்கப் போராடிய காவல்துறை அதிகாரி உயிருக்குப் போராட்டம்.

ஃப்ரான்ஸில் பல்பொருள் அங்காடியில் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரியிடம் பிணைக் கைதிகளை மீட்கப் போராடிய அந்நாட்டு காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக ஜனாதிபதி இம்மானுவேல் மெக்கரான் தெரிவித்துள்ளார்.

தென் பிரான்ஸ் நகரான ரிபெஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொது மக்களை பிணைக் கைதிகளாக பிடித்திருந்த ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மொரக்கோ நாட்டைச் சேர்ந்தவரான அவர் மூன்று பொது மக்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதலில், காவல்துறை அதிகாரி உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுத குழுவை சேர்ந்தவர் என நம்பப்படும் அவர் சிறையடைக்கப்பட்டுள்ள சலா அப்டீஸ்லம் என்ற தீவிரவாதியினை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

சிறையடைக்கப்பட்டுள்ளவர், கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பாரிய தாக்குதலின் முக்கியமானவர் என்பதும்,  அத்தாக்குதலின் போது 130 பொது மக்கள் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...