Designed by Iniyas LTD
வலிவடக்கில் நாளை 680 ஏக்கர் காணி விடுவிக்கப்பட உள்ளது
வலி.வடக்கில் மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளில் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள 680 ஏக்கர் காணி நாளை விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாளையதினம் மயிலிட்டி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள மைதான காணியில் , முற்பகல் 10 மணிக்கு காணி விடுவிப்புநிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான ஒழுங்கமைப்பில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்கவும் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.