தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மத்திய ஆபிரிக்காவில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

மத்திய ஆபிரிக்க குடியரசில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நடத்தப்படட தாக்குதலில்  15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய ஆபிரிக்க குடியரசின்  தலைநகர் பெங்குயில் உள்ள நோட்ரே டேம் டி பாத்திமா தேவாலத்துள் புகுந்த ஆயுததாரிகள் சிலர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்

முஸ்லிம் மக்கள் அதிகம் வாழ்கின்ற பகுதியில் இந்த கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது

இந்நிலையில் அங்கு இயங்கும் தீவிரவாதக் குழுக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும்  கூறப்படுகின்றது.

நைஜீரியா

இதேவேளை  வடகிழக்கு நைஜீரிய நகரான முபியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த தாகுதலில்   27 பேர்  கொல்லப்பட்டுள்ளதாகவும் எனவும் கூறப்பட்டுள்ளது

இச் சம்பவத்தில் மேலும் பலர்  படுகாயமடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த  தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்புக்கோராத போதும், போக்கோ ஹராம் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று  சந்தேகைக்கப்படுகின்றது

Comments
Loading...