Designed by Iniyas LTD
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் 27 பேர் உயிரிழந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.
அடையாளம் காண்பித்தமை
துப்பாக்கி பிரயோகத்தின் போது கைதிகளை அடையாளம் காண்பித்து உதவியதாக , குறித்த காலப்பகுதியில் வெலிக்டை சிறைச்சாலை ஆணையாளராக செயற்பட்டு வந்த எமில்ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் காவல் துறை பரிசோதகர் ரங்கஜீவ ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவருக்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
