Designed by Iniyas LTD
காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறையில் இடம்பெற உள்ளது
காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 19ம் திகதி காலை 09.30 மணிக்கு காணாமல் போனோர் அலுவலகத்தின் அலுவலர்கள் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிவில் சமூக அமைப்புக்கள்
மேலும் அன்றையதினம் காலை 11.30 மணிக்கு காணாமல் போனோர் அலுவலகம் சிவில் சமூக அமைப்புக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
இதேவேளை காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அதன் முதல் சந்திப்பு கடந்த 12ம் திகதி மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
